
ராஜபாளையம்: ராஜபாளையம் ஆவரம்பட்டி சாலியர் தெற்கு தெரு விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.
மூன்று நாட்களாக பூஜை, பாராயணம், ஹோம குண்டங்களில் யாக பூஜைகள் நடந்து பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை அடுத்து நேற்று அதிகாலை முதல் மூலவரான சக்தி விநாயகர், சக்தி மாரியம்மன் பரிவார மூர்த்திகளான முருகன், தட்சிணாமூர்த்தி தெய்வங்களுக்கு கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கி மூல மந்திர யாக நிகழ்ச்சியை அடுத்து காலை 8:30 மணிக்கு துவங்கி 9:30 மணி வரை கும்பாபிஷேகம் நடந்தது.
விநாயகர் சக்தி மாரியம்மனுக்கும் அதனை தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்து புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனை அடுத்து சுவாமிகள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மகா தீபாராதனையை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டு அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை சாலியர் தெற்கு தெரு விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

