/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குளத்துப்பட்டியில் கும்பாபிஷேகம்
/
குளத்துப்பட்டியில் கும்பாபிஷேகம்
ADDED : செப் 17, 2024 04:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே குளத்துப்பட்டி கன்னிமூல கனக கணபதி, சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
முதல் நாள் காப்பு கட்டுதல், கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, தம்பதி பூஜை, பிரம்மச்சாரி பூஜை மற்றும் யாகசால பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கடம் புறப்பாடு, கோபுர கலசங்களுக்கு மூலவருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. பின் கணபதி, அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.