/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வைத்தியநாதசுவாமி கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
/
வைத்தியநாதசுவாமி கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 02, 2024 03:20 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் இன்று (ஜூன் 2) நடக்கிறது.
இன்று அதிகாலை முதல் திருமுறை பாராயணம், ஆறாம் கால யாகசாலை பூஜை, பரிவார யாகசாலை, பூர்ணஹுதி, தீபாராதனை நடக்கிறது இதனையடுத்து பரிவார தெய்வங்கள் கும்பாபிஷேகம், பிரதான யாகசாலை பூஜை, கும்பங்கள் புறப்பாடு நடக்கிறது.
பின்னர் காலை 7:45 மணி முதல் 8: 45 மணிக்குள் ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமான கோபுரங்களுக்கும் மகா கும்பாபிஷேகத்தை பட்டர்கள் நடத்துகின்றனர். இதனையடுத்து சுவாமி , அம்பாளுக்கு மகாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. இரவு 6:00 மணிக்குமேல் திருக்கல்யாணம் , பஞ்சமூர்த்தி வீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் கோயில் பட்டர்கள் செய்துள்ளனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.