ADDED : மார் 24, 2024 01:08 AM
அ நிறம் | அளவு
விருதுநகர் : விருதுநகர் ஆமத்துார் அருகே வெள்ளூரைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் தகர செட் அமைத்து சட்ட விரோதமாக பேன்சி ரக பட்டாசுகளை தயார் செய்த போது மூலப்பொருட்களில் உராய்வு ஏற்பட்டதில் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் 51, பலியானார்.
ஆமத்துார் போலீசார் தோட்டத்தின் உரிமையாளர் மகேஸ்வரனை கைது செய்தனர். எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில் மகேஸ்வரனை குண்டர்தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டார்.
