ADDED : மே 03, 2026 10:23 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகரில் நோபிள் கல்விக் குழுமத்தில் உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
கல்விக் குழும தலைவர் ஜெரால்டு ஞானரத்தினம், செயலாளர் வெர்ஜின் இனிகோ, துணைத் தலைவர் நிஜிஷ் தலைமை வகித்தனர். அனைத்து கல்விக்குழும முதல்வர்கள் பங்கேற்றனர். ஆசிரியை மேரி ஜெனிதா ரோஸ் வரவேற்றார். குழுமத்தின் தலைவர், அனைத்து பணியாளர்களுக்கும் வாழ்த்துக்களை கூறி அவர்களை உற்சாகப்படுத்தி பேசினார். செயலாளர், பெண் பணியாளர்களுக்கு வாழ்த்துக் கூறி அவர்களின் பணிகளை பாராட்டி பேசினார். நிர்வாகத்தினர் அனைத்து பணியாளர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். ஆசிரியை அம்பிகா நன்றிக் கூறினார். அனைவருக்கும் மதிய விருந்து அளிக்கப்பட்டு நிர்வாகத்தினரே அனைத்து பணியாளர்களுக்கும் உணவு பரிமாறினர்.
