/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாய்ந்த மின்கம்பம் சரி செய்யப்பட்டது
/
சாய்ந்த மின்கம்பம் சரி செய்யப்பட்டது
ADDED : செப் 18, 2024 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி மாநகராட்சி 48 வது வார்டு காளியப்பா நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் சாய்ந்த நிலையில் மின்கம்பம் இருந்தது. தெருவின் ஓரத்தில் இருந்ததால் வாகனங்கள் சென்று வருவதிலும் சிரமம் ஏற்பட்டது. குடியிருப்புவாசிகள் அச்சத்தில் இருந்தனர்.
இது குறித்து தினமலர் நாளிதழ் குடியிருப்போர் குரல் பகுதியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மின் துறையினர் சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பத்தை சரி செய்தனர். இதனால் அப்பகுதியினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

