தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சட்ட பயிற்சி வகுப்பு

சட்ட பயிற்சி வகுப்பு

சட்ட பயிற்சி வகுப்பு


ADDED : மே 14, 2024 12:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2024 12:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: இந்தியாவில் 'பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷ்ய ஆதிநியம், பாரதிய நியாய சன்ஹிதா' ஆகிய புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

இந்த சட்டங்கள் குறித்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பை விருதுநகரில் எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லா தலைமை வகித்து துவக்கி வைத்தார்.

இதில் ஏ.டி.எஸ்.பி.,க்கள் சூர்யமூர்த்தி, அசோகன், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இதற்கான ஆசிரியர்களாக மதுரை சட்டக்கல்லுாரி உதவி பேராசிரியர்கள் சோனா, தமிழ்ச்செல்வி, ஏற்கனவே பயிற்சி பெற்ற இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் உள்ளனர். இப்பயிற்சி வகுப்பு மே 13ல் துவங்கி மே 17 வரை நடக்கிறது.

மேலும் டி.எஸ்பி.,க்கள் தலைமையில் உட்கோட்ட வாரியாக போலீஸ் அதிகாரிகளுக்கு 7 கட்டமாக பயிற்சி வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us