தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ * கண்மாய் காப்போம் . . .

 * கண்மாய் காப்போம் . . .

 * கண்மாய் காப்போம் . . .


UPDATED : பிப் 19, 2026 06:32 AM

ADDED : பிப் 19, 2026 06:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 19, 2026 06:32 AM ADDED : பிப் 19, 2026 06:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருச்சுழி: திருச்சுழி அருகே இறைச்சின்னம் பட்டி ஓட்ட கண்மாய் பரா மரிப்பு இன்றி கரைகள் பலம் இழந்தும், மடைகள் சேதம் அடைந்தும் தண்ணீர் வரத்தின்றி அழியும் நிலையில் உள்ளது.

திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஆர். கல்லு மடம் ஊராட்சிக்கு உட்பட்ட இறைச்சின்னம் பட்டியில் உள்ளது ஓட்ட கண்மாய். இது 30 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. ஒரு காலத்தில் விவசாயத்திற்கு பாசன வசதியும், பல கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இருந்தது.

Image 1538173


கண்மாயை சுற்றியுள்ள கல்லு குளம், கத்தாளம் பட்டி, தம்ம நாயக்கன் பட்டி, வேடநத்தம் உள்ளிட்ட கிராமங்கள் விவசாயம் நன்கு நடந்தது. சுமார் 80 ஏக்கருக்கும் மேல் விவசாயம் செய்து வந்தனர். நெல் சாகுபடி நன்கு இருந்தது.

நாளடைவில் கண்மாயை பராமரிப்பு செய்யாமல் விட்டதால், சீமை கருவேல மரங்கள் நன்கு வளர்ந்துள்ளது. 20 ஆண்டுகளாக கண்மாயில் தண்ணீர் வருவது இல்லை. இதனால் விவசாயமும் குறைந்து போனது.

அடர்ந்த சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் காட்டு பன்றிகளின் வசிப்பிடமாக கண்மாய் மாறிவிட்டது. கண்மாயில் உள்ள இரண்டு மடைகளும் சேதம் அடைந்து விட்டது.

கண்மாயை தூர்வார கோரி விவசாயிகள் பலமுறை ஊராட்சியில் கோரிக்கை வைத்து நட வடிக்கை இல்லை. கண்மாய்களின் மழை நீர்வரத்து ஓடைகளும் பல பகுதிகளில் சேதம் அடைந்து விட்டதால் தண்ணீர் வருவது குறைந்து போனது.

விவசாயம் இல்லை முனியசாமி, விவசாயி: எங்கள் ஊர் கண்மாயில் 20 ஆண்டுகளாக தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. கண்மாயை பராமரிப்பு செய்யாமல் விட்டதால் பல ஆண்டு களாக விவசாயம் செய்வது குறைந்து போனது. கண்மாயை நம்பி விவசாயம் செய்வது பயனற்றது என விவசாயிகள் வேதனை யுடன் உள்ளனர்.

மடைகள் சேதம் ராமன், விவசாயி: கண்மாயின் இரண்டு மடைகளும் சேதமடைந்து விட்டது. கரைகள் பலம் இழந்து விட்டது. கண்மாயை முற்றிலும் தூர் வாரி கரைகளை பலப்படுத்தி, பராமரிப்பு செய்தால் தான் தண்ணீர் சேகரம் ஆகும். பலமுறை விவசாயிகள் மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை. கண்மாயை நம்பி விவசாயம் செய்வது வீண்.

பராமரிப்பு அவசியம் அய்யனார், விவசாயி: ஓட்ட கண்மாயை நம்பி பல ஏக்கரில் விவசாயம் நடந்து வந்தது. குடிநீர் ஆதாரமாகவும் இருந்தது. 20 ஆண்டுகளுக்கு மேலாக கண்மாய் பரா மரிப்பு இன்றி போனதால் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. இப்படியே விட்டு விட்டால் நாளடைவில் கண்மாய் காணாமல் போய்விடும். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us