ADDED : மே 12, 2026 11:23 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்தூர், மே 13-
ஸ்ரீவில்லிபுத்தூரில் மின்னல் தாக்கியதில் அலைபேசி டவர் தீப்பிடித்து எரிந்தது.
நேற்று முன்தினம் இரவு பலத்த இடி, மின்னல் சப்தத்துடன் லேசான சாரல் மழை சிறிது நேரம் பெய்தது. இதில் கடுமையான மின்னல் மின்னியது. அப்போது ரெங்கநாதபுரம் பகுதியில் இருந்த ஒரு அலைபேசி டவரில் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். பின்னர் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
