/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டை அன்பு நகரில் லோ வோல்டேஜ்
/
அருப்புக்கோட்டை அன்பு நகரில் லோ வோல்டேஜ்
ADDED : மே 22, 2024 07:40 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அன்பு நகரில் வீடுகளில் லோ வோல்டேஜ் வருவதால் வீடுகளில் மின் சாதனம், எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதானதால் மக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை நகராட்சி 3 வது வார்டில் உள்ளது அன்பு நகர். இதில், 10 தெருக்கள் உள்ளனர். புறநகர் பகுதியான இங்கு லோ வோல்டேஜால் ஏற்பட்டதால் மின்வாரியத்தினர் ஒரு ஆண்டிற்கு முன்பு, இந்த பகுதிக்கு என டிரான்ஸ்பார்மர் அமைத்தனர். ஆனால் சில மாதங்களிலேயே வீடுகளில் மீண்டும் லோ வோல்டேஜ் தான் வருகிறது என மக்கள் புலம்புகின்றனர்.
பேன், பிரிட்ஜ், போர்வெல் மோட்டார் உட்பட மின் சாதனங்கள் இதனால் இயங்குவது இல்லை. எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் சேதம் அடைகின்றன. இரவு நேரங்களில் மின் விசிறி சுற்றாமல் இருப்பதால் குழந்தைகள் தூங்காமல் அவதிப்படுகின்றனர் மின் மோட்டார் இயக்க முடியாமல் தண்ணீரின்றி தினசரி வேலைகள் பாதிப்பு அடைகின்றனர்.
அன்பு நகர் பகுதியில் லோ வோல்டேஜ் பிரச்னை அடிக்கடி ஏற்படுவதை நிரந்தரமாக தீர்க்க மின்வாரிய அலுவலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

