/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டையில் முகமூடி கொள்ளையர்கள் கொள்ளை முயற்சி
/
அருப்புக்கோட்டையில் முகமூடி கொள்ளையர்கள் கொள்ளை முயற்சி
அருப்புக்கோட்டையில் முகமூடி கொள்ளையர்கள் கொள்ளை முயற்சி
அருப்புக்கோட்டையில் முகமூடி கொள்ளையர்கள் கொள்ளை முயற்சி
ADDED : ஏப் 03, 2024 07:05 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பூட்டிய வீட்டில் முகமூடி கொள்ளையர்கள் கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளார்.
அருப்புக்கோட்டை அருகே கத்தாளம்பட்டியை சேர்ந்தவர் முருகன், 34, இவர்திருப்பூரில் மில்லில் மேற்பார்வையாளராகபணிபுரிந்து வருகிறார்.
தனது குடும்பத்தாரை அருப்புக்கோட்டை மலைபட்டியில் தங்க வைத்துள்ளார். மாதம் ஒருமுறை ஊருக்கு வருவது வழக்கம். அப்போது கத்தாளம்பட்டியில் உள்ள தன் அக்காவை பார்க்க வந்து செல்வார். 3 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தவர் தன் அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார்.
வீட்டை பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு அவரது அக்கா கெங்கம்மாள் திருப்பூரில் வேலை பார்க்கும் தன் கணவரை பார்க்க சென்றுள்ளார். நேற்று முன்தினம் முருகன் கடைக்கு சென்று விட்டு அக்கா வீட்டுக்கு வந்த போது பூட்டிய வீட்டிற்குள் முகமூடி அணிந்த இருவர் ஓடி வந்தனர். இதைப் பார்த்து முருகன் ரோட்டிற்கு சென்று சத்தம் போட்டு உள்ளார்.
அக்கம் பக்கத்தினர் வருவதை பார்த்து முகமூடி நபர்கள் பைக்கில் தப்பி ஓடிவிட்டனர்.
பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே அறையில் இருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் நகையோ, பணமோ இல்லை.
இதுகுறித்து எம் ரெட்டியபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

