/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் அதிகரிக்கும் தெரு நாய்கள் தொல்லை கட்டுப்படுத்த நடவடிக்கை அவசியம்
/
சாத்துாரில் அதிகரிக்கும் தெரு நாய்கள் தொல்லை கட்டுப்படுத்த நடவடிக்கை அவசியம்
சாத்துாரில் அதிகரிக்கும் தெரு நாய்கள் தொல்லை கட்டுப்படுத்த நடவடிக்கை அவசியம்
சாத்துாரில் அதிகரிக்கும் தெரு நாய்கள் தொல்லை கட்டுப்படுத்த நடவடிக்கை அவசியம்
ADDED : ஜூலை 07, 2024 01:33 AM
சாத்துார்: சாத்துார் நகராட்சியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்
சாத்துார் மெயின் ரோடு, அண்ணா நகர் ,குருலிங்கபுரம் ,முக்குராந்தல் உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரோட்டில் நடந்து செல்பவர்களையும் இருசக்கர வாகனத்தில் செல்லுபவர்களையும் தெரு நாய்கள் விரட்டி கடிக்க பாய்கின்றன.
இரவு நேரங்களில் ரோட்டின் ஓரத்தில் கூட்டமாக படுத்து உறங்கும் நாய்கள் தனியாக நடந்து செல்பவர்களை அச்சுறுத்தும் வகையில் ஒன்று சேர்ந்து குரைக்கின்றன.
மேலும் தெரு நாய்களுக்குள் சண்டை நடக்கும் போது ரோட்டில் நடந்து செல்பவர்கள் மீது நாய்கள் விழும் நிலை உள்ளது. இதனால் பள்ளிக்குச் சென்று திரும்பும் மாணவர்கள் சிறுவர்கள் பீதி அடைகின்றனர்.
நகராட்சி நிர்வாகம் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்வது வழக்கம். நகராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கருத்தடை சிகிச்சை செய்யப்படவில்லை. இதனால் நாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தியும் நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெரு நாய் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.