/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி.,யில் அதிகரிக்கும் டூவீலர் விபத்துக்கள் தடுப்பு நடவடிக்கைகள் அவசியம்

ADDED : செப் 16, 2024 06:11 AM
ஸ்ரீவில்லிபுத்துார், : ஸ்ரீவில்லிபுத்துாரில் சிவகாசி, வத்திராயிருப்பு, சத்திரப்பட்டி ரோடுகளில் டூவீலர் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீஸ்துறை செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து ஏராளமான அரசு, தனியார் ஊழியர்கள், கல்லுாரி மாணவர்கள் டூவீலரில் அதிகளவில் சிவகாசி சென்று வருகின்றனர். இதே போல் கிருஷ்ணன் கோயிலில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் ரோட்டிலும், டூவீலர் போக்குவரத்து அதிகரித்து தினமும் ஒரு டூவீலர் விபத்தில் சிக்கும் அபாய நிலை ஏற்பட்டு வருகிறது.
மேலும் வன்னியம்பட்டியில் இருந்து சத்திரப்பட்டி செல்லும் ரோட்டிலும் நாளுக்கு நாள் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்து வருவதாலும், ரோடு குறுகியதாக உள்ளதாலும் டூவீலர்கள் மோதல் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.
இவர்களில் பலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு மதுரை, விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர். ஒரு சில நேரங்களில் உயிர் இழப்புகளும் ஏற்படுகிறது. எனவே ஸ்ரீவில்லிபுத்துார் - -சிவகாசி, கிருஷ்ணன்கோவில் - -வத்திராயிருப்பு, வன்னியம்பட்டி -- சத்திரப்பட்டி ரோடுகளில் விபத்து தடுப்பு நடவடிக்கைகளை போலீஸ்துறை செய்ய வேண்டுமன மக்கள் எதிர்பார்க்கின்றனர்.