ADDED : ஜூன் 13, 2024 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் போட்டித்தேர்வுக்கு பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் நெறி வழிகாட்டு நிகழ்ச்சி விருதுநகர் சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி மையத்தில் நாளை (ஜூன் 14) காலை 10:30 மணிக்கு கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடக்கிறது.
மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் தொலைபேசி எண் 04562 - 252068 தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.