/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி
/
மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி
ADDED : ஜூலை 04, 2024 01:02 AM

சிவகாசி: சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில் பிளஸ் டூ மாணவர்களுக்கான போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் தேர்வை கொண்டாடுவோம் என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சி 3 நாட்கள் நடந்தது.
கல்லுாரி இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி தலைமை வகித்தனர். கல்லுாரி முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார். டீன் மாரிசாமி கல்லுாரி சிறப்புகள் பற்றி கூறினார். சென்னை மனோதத்துவ நிபுணர் டாக்டர் ரகுநாத் பேசினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற கலெக்டர் ஜெயசீலன் பேசியதாவது:
பள்ளி மாணவர்கள் போதை பொருட்கள் தீமையை புரிந்து கொண்டு அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும். மாணவர்கள் பல நல்ல புத்தகங்கள் படிப்பதன் மூலமாக தங்களை நல்வழிப்படுத்திக்கொள்ள வேண்டும். அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் விழிப்புணர்வு இன்றி உயர்கல்வியை தேர்வு செய்கின்றனர்.
உயர்கல்வித்துறைகளான மருத்துவம், பொறியியல், வேளாண்மை, மீன் வளர்ப்பு பயிற்சி போன்ற துறைகளில் உள்ள வாய்ப்புகளை பற்றி நன்கு தெரிந்து கொண்டு உயர் கல்வியை தேர்ந்தெடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு மூலம் உயர் கல்வி பெற முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
திட்ட இயக்குனர் சிவசக்தி கணேஷ் குமார் கலந்து கொண்டார். 7500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பி.எஸ்.ஆர்.ஆர்., பொறியியல் கல்லுாரி முதல்வர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகம், பேராசிரியர்கள் செய்தனர்.