/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குறு நிறுவனங்கள் வளர்ச்சிக்கு நிதி பங்களிப்பு வழங்கவில்லை; எம்.பி.,மாணிக்கம் தாகூர் பேச்சு

ADDED : ஆக 19, 2024 12:53 AM
சாத்துார் : பிரதமர் மோடி அரசு அம்பானி, அதானி போன்ற பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளது எனமாணிக்கம் தாகூர் எம்.பி.கூறினார்.
சாத்துார் நகராட்சியில் நேற்று மாலை 5:30 மணிக்கு காங்., எம்.பி.மாணிக்கம் தாகூர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: இண்டியா கூட்டணி தமிழகம், புதுச்சேரி உள்பட 40 இடங்களில் வென்றுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சிக்கு சான்றாக மக்கள் வாக்களித்துள்ளனர். 1 கோடியே 17 லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இன்னும் விடுபட்ட 17 லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும்.
240 தொகுதியில் வெற்றி பெற்று வலிமையான எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் உள்ளார்.
பிரதமர் மோடி அரசு அம்பானி, அதானி போன்ற பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. சிறு குறு நிறுவனங்கள் வளர்ச்சிக்கு நிதி பங்களிப்பு வழங்கவில்லை. சாத்துார் படந்தால் நான்கு வழிச்சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்டுவதற்காக மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன், என்றார்.