/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
3 ஆண்டுகளில் கூடுதலாக 3 கோடி பேருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் அமைச்சர் கே.என். நேரு தகவல்
/
3 ஆண்டுகளில் கூடுதலாக 3 கோடி பேருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் அமைச்சர் கே.என். நேரு தகவல்
3 ஆண்டுகளில் கூடுதலாக 3 கோடி பேருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் அமைச்சர் கே.என். நேரு தகவல்
3 ஆண்டுகளில் கூடுதலாக 3 கோடி பேருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் அமைச்சர் கே.என். நேரு தகவல்
ADDED : பிப் 24, 2025 04:37 AM

காரியாபட்டி, : 3 ஆண்டுகளில் கூடுதலாக 3 கோடி பேருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட்டதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்., நேரு பேசினார்.
மல்லாங்கிணரில் காரியாபட்டி, மல்லாங்கிணர் பேரூராட்சிகளுக்கு வைகை ஆற்றை நீர் ஆதாரமாகக் கொண்டு ரூ.75 கோடியே 85 லட்சத்தில் புதிய குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்துார் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி பேசியதாவது: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 3 ஆண்டுகளில் 4 மாநகராட்சிகள், 13 நகராட்சிகள், 43 பேரூராட்சிகள், 9940 ஊரக குடியிருப்புகளுக்கு 71 குடிநீர் திட்டங்கள், நாள் ஒன்றுக்கு 759.73 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கி வருகின்றன. திருச்சி, தஞ்சாவூர், துாத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் 3 மாநகராட்சிகள், 8 நகராட்சிகள், 6 பேரூராட்சிகளில் 17 பாதாள சாக்கடை திட்டங்கள், ரூ.1782 கோடியே 42 லட்சத்தில் நாளொன்றுக்கு 160.19 மில்லியன் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யும் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
36 குடிநீர் திட்டங்களுக்கு மறு சீரமைப்பு பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. நகர்ப்புற மக்கள் தொகை 40 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்ந்துள்ளது. மறுசுழற்சிகள் மூலம் நல்ல தண்ணீராக மாற்றி பாசனத்திற்கும், நிலத்தடி நீர்மட்டம் உயருவதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, என்றார். ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி, சீனிவாசன் எம். எல்.ஏ., உட்பட பலர் கலந்து கொண்டனர்.

