/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
எய்ம்ஸ் பணியை துவக்க டில்லியில் அழுத்தம் கொடுக்காத தி.மு.க., எம்.பி.,க்கள் முன்னள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி

ADDED : மார் 30, 2024 05:50 AM
விருதுநகர், : தி.மு.க., கூட்டணியை சேர்ந்த 38 எம்.பி.,க்கள் எய்ம்ஸ் பணியை துவக்க டில்லியில் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை. , என விருதுநகரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் கூறியதாவது: தி.மு.க., ஆட்சியின் குறைகள் எங்கள் வெற்றிக்கு வழிவகுக்கும். தமிழகத்தில் இருமுனை போட்டி தான் உள்ளது.
அ.தி.மு.க., கூட்டணிக்கும், தி.மு.க., கூட்டணிக்கும் தான் போட்டி.
தொகுதியில் 15 பேர் நின்றால் 15 முனை போட்டியா. தமிழகத்தில் தி.மு.க., எதிர்ப்பலையும், அ.தி.மு.க., ஆதரவு அலை வீசுகிறது. கருப்பு எம்.ஜி.ஆர்., என்ற பெயருக்கு ஏற்றாற்போல் நடந்து கொண்டார். விஜயகாந்த் ஏழைகளுக்காக உதவினார். அ.தி.மு.க., தர்மத்தின் பக்கம் நிற்கிற கூட்டணியை வைத்துள்ளது. தி.மு.க.,வினர் சொல்வதை மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. 3 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளனர்.
ஏன் நீட் ஒழிப்போம் என்று 2019, 2021 தேர்தல்களில் கூறினர். ஆட்சிக்கு வந்து 3 ஆண்டாகிறது. ஏன் ஒழிக்கவில்லை. அதை பற்றி அழுத்தம் கொடுக்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை ஏன் கொண்டு வரவில்லை.
கொரோனாவால் முடங்கி கிடந்த காலத்தில் எந்த வேலையும் நடக்காமல் இருந்தது. வேற மாநிலங்களில் இருந்துதொழிலாளர்கள் யாரும் வர முடியவில்லை.
இல்லையென்றால் அன்றே அ.தி.மு.க., ஆட்சியிலே எய்ம்ஸ் வேலையை துவங்கி இருப்போம்.
அதற்கு பின் ஆட்சிக்கு வந்த தி.மு.க., இந்த வேலையை செய்திருக்க வேண்டும். 38 எம்.பி.,க்கள் டில்லியில் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை.
காவிரி போராட்டத்திற்காக அ.தி.மு.க., எம்.பி.,க்கள் லோக்சபாவில் போராடினோம். தி.மு.க., போராட தவறி விட்டது. பிரதமர் வந்தார். பழனிசாமி வரவேற்றார். 2021க்கு பிறகு வரும் போது முதல்வர் ஸ்டாலினும்வரவேற்றார். பிரதமர் வரும் போது 'உம்'மென்று முகத்தை வைத்து கொள்ள முடியுமா.
சிரிப்பது தவறா. செங்கலை காட்டி எத்தனை முறை காட்டுவார். மூன்று ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளனர்.என்ன நடக்கிறது என்று ஒன்றுமே புரியவில்லை. எனக்கு குழப்பமாக உள்ளது. ஆட்சி யாரிடம் உள்ளது, என்றார்.