ADDED : ஜூன் 30, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் ஆர்.ஆர்.பி., எனும் ரயில்வே தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 22 ஆயிரத்து 195 காலிப்பணியிடங்களுக்கான குரூப் டி தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வர்களுக்கு இலவச முழு மாதிரித் தேர்வுகள் ஜூலை 4, 10 ஆகிய தேதிகளில் அலுவலக வளாகத்தில் நடக்கிறது.
பங்கேற்க விரும்புவோர் https://forms.gle/fQ22tTLoLsbpUq4w8 என்ற இணையதள முகவரியில் பதிவு செய்தோ அல்லது studycirclevnr@gmail.com என்ற மெயில் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு , தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாகவோ தெரிவிக்கலாம், என்றார்.
