/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தொகுதிகளில் மாதிரி ஓட்டுப்பதிவு
/
தொகுதிகளில் மாதிரி ஓட்டுப்பதிவு
ADDED : ஏப் 12, 2024 04:10 AM
விருதுநகர்: விருதுநகர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட 6 தொகுதிகளில் மாதிரி ஓட்டுப்பதிவு நடந்தது.
விருதுநகர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளில்4066 ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் ஓட்டுச்சீட்டு பொருத்தும் பணி நடந்து வருகிறது. விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்துார் தொகுதிகளில் பொருத்தும் பணிமுடிந்த நிலையில் திருமங்கலம், திருப்பரங்குன்றம் பகுதிகளில் நடந்து வரும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசீலன் நேற்றுபார்வையிட்டார்.
இந்நிலையில் சின்னம் பொருத்தி முடிந்த தொகுதிகளில்5 சதவீத ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் தலா 1000 ஓட்டுகள் வீதம் செலுத்தப்பட்டு மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட 6 தொகுதிகளில் அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில், அரசியல் கட்சியினர் முன்னிலையில்மாதிரி ஓட்டுப்பதிவு நடந்தது.

