/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஊழலில்லாத ஆட்சியை தந்தவர் மோடி: பா.ஜ., வேட்பாளர் ராதிகா பிரசாரம்
/
ஊழலில்லாத ஆட்சியை தந்தவர் மோடி: பா.ஜ., வேட்பாளர் ராதிகா பிரசாரம்
ஊழலில்லாத ஆட்சியை தந்தவர் மோடி: பா.ஜ., வேட்பாளர் ராதிகா பிரசாரம்
ஊழலில்லாத ஆட்சியை தந்தவர் மோடி: பா.ஜ., வேட்பாளர் ராதிகா பிரசாரம்
ADDED : ஏப் 11, 2024 06:31 AM

விருதுநகர் : 10 ஆண்டுகளாக ஊழலில்லாத மக்கள் ஆட்சியை தந்தவர் மோடி. வெற்றி பெற்றால் பாலமாக இருப்பேன் என விருதுநகரில் நடந்த பிரசாரத்தில் பா.ஜ., வேட்பாளர் ராதிகா பேசினார்.
விருதுநகர் கிராமப்பகுதிகளான பாவாலி, கூரைக்குண்டு, செவல்பட்டி, மீசலுார், சீனியாபுரம், சிவஞானபுரம், செங்குன்றாபுரம், எல்லிங்கநாயக்கன்பட்டி, பிரசாரம் செய்தார்.
அவர் பேசியதாவது: ஜல் ஜீவன் திட்டம் மூலம் வீடுதோறும் இலவச குடிநீர் தந்தது பிரதமர் மோடி. எம்.பி.,க்கள் தொகுதிக்குள் வராத சூழல் மாற வேண்டும். நான் எம்.பி., ஆனால் அடிக்கடி தொகுதியில் வலம் வருவேன். 70 ஆண்டுகள் சுதந்திரம் பெற்ற பின்னும் சுகாதாரமான முறையில் கழிவை வெளியேற்ற வசதி செய்யவில்லை என்றால் தமிழக கட்சிகள் என்ன செய்கின்றன.
இப்படிப்பட்டவர்கள் கடைசி நேரத்தில் பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கி விடலாம் என்று நினைக்கின்றனர். நாளை சந்ததி நன்றாக இருக்க வேண்டும் என்றால் நாம் நல்ல முடிவு எடுக்க வேண்டும். ஓட்டு விற்பனைக்கு அல்ல என்று நினைத்தால் நிச்சயம் மாற்றம் வரும்.
இது பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தல். 10 ஆண்டுகளாக ஊழலில்லாத மக்கள் ஆட்சியை தந்தவர் மோடி. மாற்றான் தாயாக பார்க்காமல் தமிழகத்திற்கு நிறைய விஷயங்கள் தந்துள்ளார். முதலீடு, வேலைவாய்ப்பு உருவாக்கி உள்ளார். பெண்கள், சுகாதாரம், ஆரோக்கியம், மருத்துவக்காப்பீடு என பல திட்டங்களை தந்துள்ளார்.
நாட்டின் ஆளுங்கட்சியான பா.ஜ.,வை சேர்ந்த எம்.பி., ஒருவர் கூட தமிழகத்தில் இல்லை. நான் தேர்ந்தெடுக்கப்பட்டால்இங்கேயும், டில்லிக்கும் ஒரு பாலமாக இருப்பேன். மத்திய அரசின் அனைத்து திட்டங்களிலும் உங்களை பலன் பெற செய்வேன். மீண்டும் பா.ஜ., ஆட்சி தான் வர உள்ளது. இண்டியா கூட்டணிக்கு யார் பிரதமர் என்று தெரியாது. அ.தி.மு.க., கூட்டணியை நம்பி எதையுமே செய்ய முடியாது, என்றார்.
சரத்குமார், ராதிகாவை பார்க்க கிராமப்புற மூதாட்டிகள் ஆர்வத்துடன் அவர்களை சுற்றி வந்தனர்.

