ADDED : ஆக 26, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லுாரியில் ஆத்திப்பட்டி ஊராட்சி, யூனிவர்சல் வேல்யூ செல் சார்பாக சர்வதேச கொசு ஒழிப்பு தின நிகழ்ச்சி நடந்தது. அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் தலைமை வகித்தார்.
கல்லுாரி செயலர் சங்கரசேகரன், தலைவர் மயில்ராஜன் முன்னிலை வகித்தனர். முதல்வர் செல்ல தாய் வரவேற்றார். ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி பேசினார்.  கொசு ஒழிப்பு விழிப்புணர்வு நோட்டீஸ் மக்களுக்கு வழங்கப்பட்டது.  பேராசிரியர் தனலட்சுமி ஒருங்கிணைத்தார். இணை பேராசிரியர் தியாகராஜன் நன்றி கூறினார்.

