/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முறிந்து விழுந்த டிராபிக் சிக்னல் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
முறிந்து விழுந்த டிராபிக் சிக்னல் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
முறிந்து விழுந்த டிராபிக் சிக்னல் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
முறிந்து விழுந்த டிராபிக் சிக்னல் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூலை 22, 2024 04:26 AM

விருதுநகர்: விருதுநகர் மணிகூண்டு அருகே பராமரிப்பு இன்றி இருந்த டிராபிக் சிக்னல் முறிந்து தள்ளுவண்டி மீது விழுந்தது. இது போல பராமரிப்பு இன்றி உள்ள சிக்னல்கள் எப்போது வேண்டுமானாலும் முறிந்து தங்கள் மீது விழலாம் என வாகன ஓட்டிகள் அஞ்சுகின்றனர்.
விருதுநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காகவும், விபத்துக்களை தவிர்ப்பதற்காகவும் நகரின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டது. ஆனால் இவற்றில் அநேக சிக்னல்கள் போதிய பராமரிப்பு இன்றி வெறும் இரும்பு கம்பியாக உள்ளது.
விருதுநகர் மணிகூண்டு அருகே போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக டிராபிக் சிக்னல் அமைக்கப்பட்டது. இந்த சிக்னல் தொடர்ந்து பராமரிக்கப்படாததால் பழுதாகி செயல்படாமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று மதியம் 1:15 மணிக்கு முறிந்து அவ்வழியாக மாட்டிற்கு புல் ஏற்றிக்கொண்டு முதியவர் சென்ற தள்ளுவண்டி மீது விழுந்தது. இதில் முதியவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. அரை மணி நேரத்தில் கம்பி அகற்றப்பட்டது.
எனவே மாவட்ட நிர்வாம் நகரின் முக்கியப் பகுதிகளில் செயல்படாமல் முறிந்து விழும் நிலையில் உள்ள போக்குவரத்து சிக்னல்களை அகற்றி தரமான சிக்னல் கம்பங்களை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.