/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
/
முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : மே 19, 2024 11:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி செங்குந்தர் உறவின்முறை முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
கோயிலில் நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் நடந்தது. கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி பூஜை உட்பட பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், எந்திர ஸ்தாபனம் நடந்தது. நேற்று காலை புனித தீர்த்தம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
உறவின்முறை தலைவர் சுப்பையா, கௌரவ தலைவர் நடராஜன், ஊர் தலைவர் நடராஜன், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

