/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா
/
முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா
ADDED : ஏப் 10, 2024 06:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இக்கோயில் விழா ஏப்.2 ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 15 நாட்கள் நடக்கும் விழாவில் 8 ம் நாள் விழாவாக நேற்று பொங்கல் பண்டிகை நடந்தது.
பெண்கள் விரதமிருந்து கோவிலின் முன்பு பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். 9 ம் நாள் விழாவில் பக்தர்கள் அக்னி சட்டிகள் எடுத்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்துவர். மறுநாள் அதிகாலையில் பூக்குழி நிகழ்ச்சி நடக்கும். ஏற்பாடுகளை உறவின்முறை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

