ADDED : மார் 26, 2024 11:56 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம் : விருதுநகர் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கவுசிக், நேற்று திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில்தரிசனம் செய்து பிரசாரத்தை துவக்கினார். திருப்பரங்குன்றம், ஹார்விபட்டி, திருநகர், பசுமலை பகுதியில் அவர் ஓட்டு சேகரித்தார்.
அவர் கூறியதாவது:
தமிழ் மொழி, இனத்திற்காக போராட வந்துஉள்ளேன். விருதுநகரில்போட்டியிடுவது பெருமையாக உள்ளது. தொகுதி மக்களின் அடிப்படை பிரச்னைகள் எனக்கு நன்றாகவே தெரியும். இதுவரை கோரிக்கையாக இருந்து வரும் மக்களின் பிரச்னைகளை, தேர்தலில் வென்று சரி செய்வேன் என்றார்.
