/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தேர்தல் பாதுகாப்பிற்கு ஸ்ரீவி., வந்த நாகாலாந்து துணை ராணுவப்படை
/
தேர்தல் பாதுகாப்பிற்கு ஸ்ரீவி., வந்த நாகாலாந்து துணை ராணுவப்படை
தேர்தல் பாதுகாப்பிற்கு ஸ்ரீவி., வந்த நாகாலாந்து துணை ராணுவப்படை
தேர்தல் பாதுகாப்பிற்கு ஸ்ரீவி., வந்த நாகாலாந்து துணை ராணுவப்படை
ADDED : ஏப் 04, 2024 06:03 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : தென்காசி தனி லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபை தொகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக நாகலாந்து மாநிலத்தில் இருந்து 85 பேர் கொண்ட துணை ராணுவ படையினர் நேற்று வந்தனர்.
லோக்சபா தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நாள் நெருங்குவதால் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் 183 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ள நிலையில், அதில் 17 ஓட்டு சாவடி மையங்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவின்போது மோதல்கள் ஏற்படலாம் என சில ஓட்டு சாவடி மையங்களையும் தேர்தல் அதிகாரிகள் கணக்கெடுத்துள்ளனர்.
இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு தாலுகாவில் பதட்டமான ஓட்டுசாவடி பாதுகாப்பு பணியில் துணை ராணுவ படையினர் ஈடுபட உள்ளனர். இதற்காக நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்த டி.எஸ்.பி. ஜோ தலைமையில் 85 பேர் கொண்ட துணை ராணுவ படையினர் நேற்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தனர். அவர்களை டி.எஸ்.பி. முகேஷ் ஜெயக்குமார் வரவேற்றார். தற்போது திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்கள், ஓரிரு நாட்களில் பதட்டமான ஓட்டுசாவடி மையங்களிலும், கிராமங்களிலும், முக்கிய இடங்களில் திடீர் வாகன சோதனை செய்யும் பணியிலும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

