/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புது பஸ் ஸ்டாண்ட் இணைப்பு ரோடு--: பணிகளை விரைவுபடுத்த எதிர்பார்ப்பு
/
புது பஸ் ஸ்டாண்ட் இணைப்பு ரோடு--: பணிகளை விரைவுபடுத்த எதிர்பார்ப்பு
புது பஸ் ஸ்டாண்ட் இணைப்பு ரோடு--: பணிகளை விரைவுபடுத்த எதிர்பார்ப்பு
புது பஸ் ஸ்டாண்ட் இணைப்பு ரோடு--: பணிகளை விரைவுபடுத்த எதிர்பார்ப்பு
ADDED : மே 19, 2024 05:20 AM
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் முடங்கியுள்ள புது பஸ் ஸ்டாண்ட் இணைப்பு ரோடு பணிகள் விரைவு படுத்தி செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வியாபாரிகள், வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
ராஜபாளையம் நகர் பகுதி நடுவே இருந்த பழைய பஸ் ஸ்டாண்டின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 18 ஆண்டுகளுக்கு முன் சங்கரன்கோவில் ரோட்டில் புது பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டது.
புது பஸ் ஸ்டாண்ட் முழுவதாக செயல்படுத்த திருநெல்வேலி- - சங்கரன்கோவில் ரோடு மாநில நெடுஞ்சாலையில் இருந்து திருமங்கலம்- - கொல்லம் தேசிய நெடுஞ்சாலைக்கு 2 கி.மீ., துாரத்திற்கான 100 அடி அகலத்தில் இணைப்பு ரோடு கோரி வணிகர்கள், மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இத்திட்டம் செயல்பட்டால் செங்கோட்டை, குற்றாலம், மதுரை செல்லும் பஸ்கள் ஒவ்வொரு முறையும் காந்தி கலை மன்றம் வழியாக புது பஸ் ஸ்டாண்ட் வரை சென்று 6 கி.மீ வரை சுற்றுவது தவிர்க்கப்பட்டு நகருக்கு வராமல் செல்ல முடியும்.
இதற்கு தீர்வாக இணைப்பு ரோட்டிற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு திட்ட மதிப்பீடாக ரூ.36 கோடி ஒதுக்கப்பட்டு நில கையகப்படுத்தி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இழப்பீடு தொகை செலுத்தப்பட்டது. இந்நிலையில் பணிக்கு எதிராக போடப்பட்டிருந்த வழக்கு ஏப். மாத இறுதியில் தள்ளுபடி செய்யப்பட்டு தடை நீங்கியது.
ஒராண்டாக கல் ஊன்றியதுடன் நின்றுள்ள சாலை பணிகள் வேகமாக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நெரிசலில் சிக்கி இருக்கும் ராஜபாளையம் மக்கள், வணிகர்கள் இணைப்பு சாலை பணிகளை விரைந்து தொடங்க மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

