/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகரில் ஏற்றமும் இறக்கமுமாக புதிய ரோடுகள்; தவிக்கும் வாகன ஓட்டிகள்
/
விருதுநகரில் ஏற்றமும் இறக்கமுமாக புதிய ரோடுகள்; தவிக்கும் வாகன ஓட்டிகள்
விருதுநகரில் ஏற்றமும் இறக்கமுமாக புதிய ரோடுகள்; தவிக்கும் வாகன ஓட்டிகள்
விருதுநகரில் ஏற்றமும் இறக்கமுமாக புதிய ரோடுகள்; தவிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : ஏப் 04, 2024 06:24 AM

விருதுநகர், : விருதுநகரில் தேர்தலுக்கு முன் அவசர கதியில் போடப்பட்ட பல ரோடுகள் ஏற்ற, இறக்கமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற வகையில் உள்ளது.
விருதுநகரில் தேர்தலுக்கு முன் அவசர கதியில் கல்லுாரி ரோடு, ரயில்வே பீடர் ரோடு, புல்லலக்கோட்டை ரோடு ஆகியரோடுகள் போடப்பட்டன. இதில் கல்லுாரி ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பல இடங்களில் ஏற்றம், இறக்கமாக உள்ளது. மேலும் ரோட்டின் விளிம்புகளில் தார்கள் பெயர்ந்து வருகின்றன. அருகே பூங்கா உள்ளதால் நடைபயிற்சி செல்வோர் வாகனங்களை இதில் நிறுத்தினால் தாருக்குள் டூவீலர் ஸ்டாண்டுகள் புகுந்து விடுகின்றன. இதே போல் புல்லலக்கோட்டை ரோடு உழவர் சந்தை பகுதியிலும் புதிதாக போடப்பட்ட ரோடு ஏற்றமும் இறக்கமுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.
ரயில்வே பீடர் ரோட்டில் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்டு பின் ரோடு போடப்பட்டது. இதற்கு பின் அல்லித்தெரு உள்ளிட்ட அதை சுற்றியுள்ள குடியிருப்புகளில் தற்போது வரை குடிநீர் குழாய்கள் பதிக்கப்படவில்லை. மக்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
தேர்தல் நேரம் என்பதால் நகராட்சி நிர்வாக பணிகளிலும் சுணக்கம் உள்ளது. எனவே இந்த ரோடுகளை சரிவர போட நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான இடங்களில் மாவட்ட நிர்வாகம் தர ஆய்வும் செய்ய வேண்டும்.

