/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
18 நாட்களாக தண்ணீர் இல்லை --- மாற்று ஏற்பாட்டிற்கு கோரிக்கை
/
18 நாட்களாக தண்ணீர் இல்லை --- மாற்று ஏற்பாட்டிற்கு கோரிக்கை
18 நாட்களாக தண்ணீர் இல்லை --- மாற்று ஏற்பாட்டிற்கு கோரிக்கை
18 நாட்களாக தண்ணீர் இல்லை --- மாற்று ஏற்பாட்டிற்கு கோரிக்கை
ADDED : ஜூலை 31, 2024 04:40 AM
தளவாய்புரம் : செட்டியார்பட்டி பேரூராட்சியில் குழாய் உடைப்பால் 18 நாட்களுக்கும் மேல் குடிநீர் சப்ளை இல்லாததுடன், உடைப்பு சரி செய்ய முடியாமல் குடிநீர் ரோட்டில் வீணாவதை உடனடியாக சரி செய்ய மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
செட்டியார்பட்டி பேரூராட்சி 1வது வார்டில் வனமூர்த்தி லிங்கம் மெயின் தெரு முதல் ஆறு குறுக்கு தெருக்கள் உள்ளன. ஐந்து மாதங்களுக்கு முன் ரோட்டை தோண்டி குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்தது.
வாட்டர் டேங்க் முதல் கடுவா மாடசாமி கோவில் வரை உள்ள பகுதியில் அமைக்கப்பட்ட குழாயில் இரண்டு வாரம் முன்பு பழைய குழாயிலிருந்து இணைப்பு வழங்கும் பணி தொடங்கியது.
இந்நிலையில் 13 க்கும் மேற்பட்ட இடங்களில் நீர்க்கசிவு ஏற்பட்டதால் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
கசிவுகளை கண்டறிந்து சரி செய்யும் பணியால் கடந்த 18 நாட்களுக்கும் மேல் முறையான குடிநீர் சப்ளை இல்லாததால் மக்கள் குடங்களை துாக்கி அலைந்து வருகின்றனர்.
இது குறித்து மணிகண்டன்: நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை இருந்து வரும் நிலையில், கசிவை காரணம் காட்டி தாமதப்படுத்தி வருகின்றனர். இதனால் சாமானியர்கள் குடங்களை துாக்கி அருகாமை பகுதிகளுக்கு அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதுவரை மாற்று ஏற்பாடாக ஏற்கனவே உள்ள பழைய குழாயில் சப்ளை அல்லது லாரி மூலம் தண்ணீர் விநியோகிக்க வேண்டும்.

