/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செயல்படாத டிராபிக் சிக்னல்கள், சேதமான ரோடு; தவிப்பில் நாரணாபுரம் நான்கு விலக்கு ரோடு பகுதி மக்கள்
/
செயல்படாத டிராபிக் சிக்னல்கள், சேதமான ரோடு; தவிப்பில் நாரணாபுரம் நான்கு விலக்கு ரோடு பகுதி மக்கள்
செயல்படாத டிராபிக் சிக்னல்கள், சேதமான ரோடு; தவிப்பில் நாரணாபுரம் நான்கு விலக்கு ரோடு பகுதி மக்கள்
செயல்படாத டிராபிக் சிக்னல்கள், சேதமான ரோடு; தவிப்பில் நாரணாபுரம் நான்கு விலக்கு ரோடு பகுதி மக்கள்
ADDED : ஜூன் 11, 2024 07:23 AM

சிவகாசி : டிராபிக் சிக்னல்கள் செயல்படவில்லை, ரோடு சேதம் என சிவகாசி நாரணாபுரம் நான்கு ரோடு விலக்கு பகுதி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர்.
சிவகாசி நாரணாபுரம் ரோடு நான்கு விலக்கு பகுதியில் டிராபிக் சிக்னல்கள் செயல்படாதது முக்கிய பிரச்னையாக உள்ளது. இப்பகுதியில் பயன்பாட்டில் உள்ள சுகாதார வளாகம் சேதமடைந்துள்ளது. மேலும் இதன் கழிவு நீர் வெளியேறி ரோட்டில் ஓடுகிறது. இதனால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் ஏற்படுகிறது.
தவிர சுகாதார வளாகத்தின் முன்புறம் கட்டடக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் இங்கு வருகிற மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது. இப்பகுதியில் உள்ள ஓடையை முழுமையாக துார்வாரி கழிவுநீர் வெளியேறச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரோட்டில் பாதி அளவு கொட்டிக் கிடக்கும் மணல்களால் டூவீலர்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகின்றனர்.
எனவே இப்பகுதியில் ரோட்டில் கிடக்கும் மணல்களை உடனடியாக அகற்ற வேண்டும். நாரணாபுரம் விலக்கு அருகே பைபாஸ் ரோடு ஆங்காங்கே சிதைந்துள்ளது. இதில் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகின்றது டூவீலரில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே இப்பகுதியில் சேதம் அடைந்துள்ள ரோட்டினை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
இப்பகுதியில் பஸ் ஸ்டாண்டு, நாரணாபுரம், பிச்சாண்டி தெரு, விருதுநகர் ரோடு பிரிகிறது. இதனால் எந்நேரமும் இப்பகுதியில் போக்குவரத்து நிறைந்திருக்கும். எனவே போக்குவரத்தை சரி செய்வதற்காக இங்கு டிராபிக் சிக்னல்கள் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரையிலும் சிக்னல்கள் செயல்படவில்லை. நான்கு ரோடுகளிலிருந்தும் வருகின்ற வாகனங்கள் எளிதில் விலகிச் செல்வதற்கு வழி இல்லாமல் திணறுகின்றன.
- வரதராஜன், ஆட்டோ டிரைவர்.
நான்கு ரோடு விலக்கில் இருந்து நாரணாபுரம் செல்லும் ரோடு ஆங்காங்கே சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதில் டூவீலர் உட்பட எந்த வாகனமும் சென்று வர முடியவில்லை. மழைக்காலங்களில் ரோட்டில் பள்ளம் இருப்பது தெரியாததால் டூவீலரில் செல்பவர்கள் அடிக்கடி கீழே விழுகின்றனர்.
- கண்ணன், ஆட்டோ டிரைவர்.