/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வளைவுகளில் கருவேல மரங்கள்; விபத்து அச்சம்
/
வளைவுகளில் கருவேல மரங்கள்; விபத்து அச்சம்
ADDED : மே 22, 2024 07:36 AM

காரியாபட்டி : காரியாபட்டியில் 8 கி.மீ., துாரம் உள்ள வையம்பட்டி கிராமத்திற்கு செல்லும் ரோட்டில் 36 வளைவுகள் உள்ளன. இங்கு வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களாலும் விபத்து அபாயம் இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
காரியாபட்டியில் இருந்து பாம்பாட்டி, பாஞ்சார் வழியாக வையம்பட்டிக்கு 8 கி.மீ., துாரம் உள்ளது. இங்குள்ள வையம்மாள் கோயிலுக்கும், நடக்க முடியாத குழந்தைகளுக்கு மருந்து தடவவும் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் ஏராளமானவர்கள் டூவீலர், கார்களில் வந்து செல்வர். ஒரு வழி ரோடாக இருப்பதால், இரு வாகனங்கள் விலகிச் செல்வதில் பெரும் சிரமம் இருந்து வருகிறது.
8 கி. மீ., தொலைவில் உள்ள இந்த ரோட்டில் 36 வளைவுகள் உள்ளன. இது மலைப்பகுதி கிடையாது. அருகருகே வளைவுகள் இருப்பதால் லாரி போன்ற வாகனங்கள் இந்த ரோட்டில் செல்ல முடியாது. ரோட்டை ஒட்டி சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அடிக்கடி விபத்து நடக்கிறது. விபத்து அபாயத்தால் வாகன ஓட்டிகள் அச்சம் ஏற்படுகிறது.
ரோட்டோரம் உள்ள சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்த வேண்டும். வாகனங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு ரோடு அகலப்படுத்த வேண்டும்.

