ADDED : மே 27, 2024 12:30 AM
விருதுநகர்:
ஸ்ரீவில்லிபுத்துாரில் நடப்பு பருவத்தில் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் எள் பயிரில் எஸ்.வி.பி.ஆர்., 1, பாசிப்பயறு வம்பன் 5, சோளத்தில் கோ 32 ஆகிய ரகங்களின் வல்லுனர் நிலை விதைப்பண்ணை அமைக்கப்பட்டு அவை பூக்கும், முதிர்ச்சி பருவத்தில் உள்ளது.
இவ்விதை பண்ணைகளை பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர், தலைவர் விமலா, பயிர் இனப்பெருக்கம், மரபியல் துறை பேராசிரியர் தங்கப்பாண்டியன், மதுரை வேளாண் கல்லுாரி பேராசிரியர் லெட்சுமி நாராயணன், விதை சான்று, அங்க சான்று உதவி இயக்குனர் சுப்பாராஜ், விதை சான்று அலுவலர் மோகனப்ரியா ஆகியோர் அடங்கிய வல்லுனர் விதை உற்பத்தி கண்காணிப்பு குழு ஆய்வு செய்தது.
ஆய்வின் போது விதைப்பயிர் நடவு முறை, பிற ரக கலவன்கள் பயிர் விலகு துாரம், குறித்தறிவிக்கப்பட்ட நோய்கள் போன்றவற்றையும் ஆய்வு செய்தனர். மேலும் தரமான வல்லுனர் விதைகளை உற்பத்தி செய்ய தேவையான நடைமுறைகளையும் கடைபிடிக்க அறிவுறுத்தினர்.

