ADDED : ஏப் 28, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் : ராஜபாளையத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சங்கிலிக்காளை 38, நேற்று காலை சேத்துார் நோக்கி சென்று கொண்டிருந்தார். சென்னையில் இருந்து தென்காசி சென்ற ஆம்னி பஸ் ஆட்டோவை முந்த முயன்று மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்து சாலையோர மரத்தில் மோதி பஸ் நின்றது.
இதில் பஸ், ஆட்டோவின் முன்பக்கம் சேதமானது. ஆட்டோ டிரைவர் சங்கிலி காளை மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.

