ADDED : மார் 08, 2025 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
ராஜபாளையம் பிரிக்கடை பஜார் பகுதியில் ஏற்கனவே இருந்த அலுவலகத்தை சீரமைத்து ரூ.1.88 கோடி மதிப்பில் புதிய அலுவலகம் கட்ட நவ.2023ல் வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.
இதனைத் தொடர்ந்து புதிய அலுவலகத்தை சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
எம்.எல்.ஏ., தங்கபாண்டியன், நகராட்சி தலைவர் பவித்ரா உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி துவக்கினர்.
மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) பூபதி, மாவட்ட பதிவாளர் (தணிக்கை) குணசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.