/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இழப்பீட்டுடன் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க துாத்துக்குடி கலெக்டருக்கு உத்தரவு
/
இழப்பீட்டுடன் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க துாத்துக்குடி கலெக்டருக்கு உத்தரவு
இழப்பீட்டுடன் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க துாத்துக்குடி கலெக்டருக்கு உத்தரவு
இழப்பீட்டுடன் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க துாத்துக்குடி கலெக்டருக்கு உத்தரவு
ADDED : மே 10, 2024 04:29 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: மக்காச்சோள பயிருக்கு பிரிமியம் தொகை செலுத்தியிருந்த தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் விவசாயி வேணுகோபாலுக்கு பயிர் காப்பீட்டு தொகை ரூ. 1.15 லட்சம், விவசாயி கேசவனுக்கு ரூ.1.02 லட்சத்தை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், கோவில்பட்டி கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர், சென்னை நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி மண்டல மேலாளர் ஆகியோர் சேர்ந்தோ அல்லது தனித்தோ வழங்கவேண்டுமென விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா கருத்தையாபுரத்தைச் சேர்ந்த விவசாயிகள் வேணுகோபால். கேசவன். இவர்கள் விளாத்திகுளம் தாலுகா குருவர்பட்டி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் பயிரிட்டு இருந்த மக்காச்சோளம் பயிருக்கு பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2016ல் பிரிமியம் தொகையை செலுத்தி பயிர் காப்பீடு செய்துள்ளார்.
இத்திட்டத்தின்படி விவசாயி வேணுகோபாலுக்கு ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 935, கேசவனுக்கு ரு.1.02 லட்சம் பயிர் காப்பீடு தொகை வழங்க வேண்டும். ஆனால், சென்னை நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனமும், தூத்துக்குடி மாவட்டம் கோடாங்கி பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கமும் பயிர் காப்பீட்டு தொகையை வழங்கவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட இருவரும் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு, தலைவர் சக்கரவர்த்தி உறுப்பினர் முத்துலட்சுமி விசாரித்தனர்.
இதில் பயிர் காப்பீடு தொகையான வேணுகோபாலுக்கு ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 935, கேசவனுக்கு ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 49, மன உளைச்சலுக்கு ரூ. 10 ஆயிரம், வழக்கு செலவு தொகை ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை சென்னை நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி மண்டல மேலாளர், கோடாங்கிபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர், கோவில்பட்டி கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆகியோர் சேர்ந்தோ அல்லது தனித்தோ வழங்க வேண்டுமென நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி உத்தரவிட்டார்.