/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை
/
வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை
வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை
வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை
ADDED : ஏப் 26, 2024 01:02 AM
விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: லோக்சபா தேர்தல் பிற மாநிலங்களில் ஏப். 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள், கட்டுமானம், அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் மாநிலத்தில் லோக்சபா தேர்தலில் ஓட்டுப்பதிவு செய்வதற்கு செல்ல ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.
இதை செய்யத்தவறும் ஆலைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் சார்பில் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான குறைகளை வேல்முருகன் - 88257 11344, ரவிக்குமார் - 94437 64310, சுசீலா 98658 11166, ராஜ்குமார் - 93447 45064, தீபா - 90036 45279, சஜின் 99947 21299 என்ற அலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

