/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலா வரும் விஷப்பூச்சிகள் பயத்தில் நோயாளிகள்
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலா வரும் விஷப்பூச்சிகள் பயத்தில் நோயாளிகள்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலா வரும் விஷப்பூச்சிகள் பயத்தில் நோயாளிகள்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலா வரும் விஷப்பூச்சிகள் பயத்தில் நோயாளிகள்
ADDED : மே 30, 2024 02:10 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினம் தினம் பாம்புகள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் வருவதால் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் மருத்துவமனை ஊழியர்கள் பயத்தில் உள்ளனர்.
அருப்புக்கோட்டையில் கோபாலபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. 1986 ல் துவங்கப்பட்ட இந்த மருத்துவமனைக்கு கட்டங்குடி, தாதம்பட்டி, பாலையம்பட்டி, கோபாலபுரம், கோவிலாங்குளம் உட்பட பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற வருவர். மருத்துவமனையில் 30 படுக்கைகள் கூடிய பிரசவ வார்டு தனியாக உள்ளது.
அனைத்து வசதிகளும் உள்ளது. அறுவை சிகிச்சை அரங்கும் உள்ளது. வளாகத்தைச் சுற்றி புதர்கள், செடிகள் வளர்ந்துள்ளதால் விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. மருத்துவமனைக்குள் பாம்புகள் வராத நாளே இல்லை.
7 நாட்களுக்கு முன்பு, சித்தா பிரிவில் உள்ள பீரோவில் பாம்பு புகுந்து, தீயணைப்பு துறையினர் வந்து பிடித்துள்ளனர். அடிக்கடி பீரோவிற்குள் தான் பாம்புகள் இருப்பதால் ஆவணங்கள் பொருட்கள் எடுப்பதற்கு செவிலியர்கள் பயந்து கொண்டே தான் செல்ல வேண்டி உள்ளது.
மேலும் மருத்துவமனைக்கு என்று இரவு காவலர் இல்லை. இரவு நேரங்களில் பெண் செவிலியர்கள் தான் பணியில் உள்ளனர். பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் செவிலியர்களும் நோயாளிகளும் உள்ளனர்.
மாவட்ட மருத்துவ துறை ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திற்குள் இருக்கும் செடி கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு காவலர்களை பணியில் அமர்த்த வேண்டும்.