/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தொழிலாளர் நல நிதி செலுத்துவது அவசியம்; விழிப்புணர்வு ஏற்படுத்த எதிர்பார்ப்பு
/
தொழிலாளர் நல நிதி செலுத்துவது அவசியம்; விழிப்புணர்வு ஏற்படுத்த எதிர்பார்ப்பு
தொழிலாளர் நல நிதி செலுத்துவது அவசியம்; விழிப்புணர்வு ஏற்படுத்த எதிர்பார்ப்பு
தொழிலாளர் நல நிதி செலுத்துவது அவசியம்; விழிப்புணர்வு ஏற்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 07, 2024 06:19 AM
மாவட்டத்தில் தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், ஓட்டல்கள், தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர், நிறுவனத்தின் பங்காக ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.60 என கணக்கிட்டு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொழிலாளர் நல நிதி தொகையை வாரியத்திற்கு செலுத்த வேண்டும்.
அதன்படி நடப்பு 2023ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியை 2024 ஜன. 31க்குள் செலுத்த வேண்டியதில் 571 அமைப்பு சார் நிறுவனங்களில் இருந்து 29 ஆயிரத்து 204 தொழிலாளர்களுக்குமட்டுமே நிதி செலுத்தப்பட்டுள்ளது.
இது குறித்த விழிப்புணர்வு அதிகம் ஏற்பட வேண்டி உள்ளது. காரணம், விருதுநகர் மாவட்டம் முழுவதும் தொழலாளர்கள் நிறைந்த மாவட்டம். பட்டாசு, தீப்பெட்டி, அச்சகங்கள், பருப்பு மில்கள், ஜின்னிங், ஸ்பின்னிங் மில்கள் எனபல தொழில்களில் லட்சக்கணக்கில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தாலும் தொழிலாளர் நல நிதி செலுத்துவது குறைவாக உள்ளது.
குறைவானோரே தொழிலாளர் நல நிதி செலுத்துவதால் இவர்களில் விபத்து காரணமாகவும், பல்வேறு தொழில் ரீதியான சிக்கல் காரணமாக பாதிக்கப்படும் தொழிலாளர்கள் உள்ளனர். எனவே நிதி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிலாளர் துறை மூலம்நலவாரியங்களில் செலுத்தப்படும் இந்த நிதி மூலம் தொழிலாளர்களுக்கு கண் கண்ணாடி, அவர்களது குழந்தைகளின் படிப்புக்கான உதவித்தொகை, விபத்து ஊன, மரணத்திற்கான நிதி போன்றவை தருகின்றனர்.
எனவே தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டுமாவட்ட நிர்வாகம் இதற்கு அதிக முக்கியத்துவம் தந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி நிதி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும்.

