/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோட்டை பெயர்த்து புதிய ரோடு அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
/
ரோட்டை பெயர்த்து புதிய ரோடு அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
ரோட்டை பெயர்த்து புதிய ரோடு அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
ரோட்டை பெயர்த்து புதிய ரோடு அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 06, 2024 05:21 AM

சிவகாசி : சிவகாசி பைபாஸ் ரோடு ரத்னவிலாஸ் பஸ் ஸ்டாப்பில் இருந்து சாமிபுரம் காலனி செல்லும் சேதமடைந்த ரோட்டினை தோண்டி, புதிதாக போட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
சிவகாசி பைபாஸ் ரோடு ரத்னா விலாஸ் பஸ் ஸ்டாப்பில் இருந்து சிவகாமிபுரம் காலனி செல்லும் வரை சேதம் அடைந்திருந்தது.
இதனை சீரமைப்பதற்காக சேதம் அடைந்த ரோடு மேலோட்டமாக கிளறப்பட்டுள்ளது.
இப்பகுதியில் ஏற்கனவே ரோடு உயரத்தில் உள்ள நிலையில் வீடுகள் அனைத்துமே தாழ்வான பகுதியில் உள்ளது.
இதனால் சிறிய மழை பெய்தாலும் தண்ணீர் வீட்டுக்குள் சென்று விடுகின்றது.
இந்நிலையில் புதிதாக இங்கு ரோடு போடுவதற்காக சேதம் அடைந்த ரோடு மேலோட்டமாக கிளறப்பட்டுள்ளது.
இதில் அப்படியே ரோடு போட்டால் இன்னும் உயரம் கூடிவிடும். எனவே மீண்டும் மழை பெய்தால் தண்ணீர் வீட்டிற்குள் சென்று விட வாய்ப்புள்ளது.
தவிர இப்பகுதியில் பெரும்பான்மையான மின் ஒயர்கள் மிகவும் தாழ்வாக செல்கின்றது.
இதில் வருவதற்கே வாகனங்கள் திணறுகின்ற நிலையில் ரோடும் உயர்த்திப் போட்டால் வாகனங்கள் வர வாய்ப்பு இல்லை.
எனவே இப்பகுதியில் பழைய ரோட்டினை முற்றிலும் பெயர்த்து புதிய ரோடு போட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

