/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திறந்த வெளி கிணறு குப்பை கிடங்காக மாறியதால் அண்ணா நகர் மக்கள் அவதி
/
திறந்த வெளி கிணறு குப்பை கிடங்காக மாறியதால் அண்ணா நகர் மக்கள் அவதி
திறந்த வெளி கிணறு குப்பை கிடங்காக மாறியதால் அண்ணா நகர் மக்கள் அவதி
திறந்த வெளி கிணறு குப்பை கிடங்காக மாறியதால் அண்ணா நகர் மக்கள் அவதி
ADDED : ஜூன் 15, 2024 07:00 AM

சிவகாசி : சிவகாசி மாநகராட்சி 25வது வார்டு அண்ணா நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள திறந்த வெளி கிணற்றினால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சிவகாசி மாநகராட்சி 25வது வார்டு அண்ணா நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் திறந்த வெளி கிணறு உள்ளது.
தற்போது திறந்த வெளி கிணறு குப்பை கிடங்காக மாறிவிட்டது.
மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி கழிவு நீராக மாறி விடுகின்றது. மேலும் தண்ணீர் குடி இருக்கும் பகுதிகளுக்குள்ளும் புகுந்து விடுகின்றது.
இதனால் இப்பகுதி முழுவதுமே துர்நாற்றம் ஏற்படுகிறது. மேலும் பலரும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர்.
தவிர பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் சர்வ சாதாரணமாக குடியிருப்பு பகுதியில் நடமாடுகின்றது.
குழந்தைகள், பெரியவர்கள் தெரியாமல் கிணற்றில் விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்னர் உடனடியாக கிணறை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.