/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஓடையில் செத்து மிதந்த மீன்கள் துர்நாற்றத்தால் மக்கள் அவதி
/
ஓடையில் செத்து மிதந்த மீன்கள் துர்நாற்றத்தால் மக்கள் அவதி
ஓடையில் செத்து மிதந்த மீன்கள் துர்நாற்றத்தால் மக்கள் அவதி
ஓடையில் செத்து மிதந்த மீன்கள் துர்நாற்றத்தால் மக்கள் அவதி
ADDED : ஆக 23, 2024 03:42 AM

சிவகாசி: திருத்தங்கலில் இருந்து விருதுநகர் செல்லும் ரோட்டில் உள்ள ஓடையில் மீன்கள் செத்து மிதந்ததால் துர்நாற்றம் வீசுகிறது.
சிவகாசி அருகே திருத்தங்கலில் இருந்து விருதுநகர் ரோட்டில் ஓடை செல்கிறது. இந்த ஓடை வழியாக வாடியூர் கண்மாய்க்கு தண்ணீர் செல்லும். சமீபத்தில் சிவகாசி திருத்தங்கல் பகுதியில் பரவலாக மழை பெய்தது இதனால் பெரியகுளம் கண்மாயிலிருந்து தண்ணீர் வெளியேறி இந்த ஓடை வழியாக சென்றது. இதில் ஏராளமான மீன்கள் செத்து கிடந்தது.
திருத்தங்கல் செங்குளம் கண்மாய் தன்னார்வலர்களால் துார்வாரப்பட்டு வருகின்றது. இதிலிருந்த மீன்கள் தண்ணீர் இல்லாமல் செத்து மழைநீரில் வெளியேறியது.
மேலும் திருத்தங்கல் பெரியகுளம் கண்மாய் கழிவு நீராக மாறியதால் அதிலிருந்த பெரும்பான்மையான மீன்களும் செத்துவிட்டது. இவை அனைத்துமே ஓடை வழியாக மிதந்து வந்தது. இதனால் அப்பகுதி முழுவதுமே துர்நாற்றம் ஏற்படுகின்றது.