/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தி.மு.க., மீது மக்கள் அதிருப்தி; குஷிப்படுத்த டாஸ்மாக் கடை மூடல்
/
தி.மு.க., மீது மக்கள் அதிருப்தி; குஷிப்படுத்த டாஸ்மாக் கடை மூடல்
தி.மு.க., மீது மக்கள் அதிருப்தி; குஷிப்படுத்த டாஸ்மாக் கடை மூடல்
தி.மு.க., மீது மக்கள் அதிருப்தி; குஷிப்படுத்த டாஸ்மாக் கடை மூடல்
ADDED : ஏப் 03, 2024 07:06 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையை பல ஆண்டுகளாக மூட சொல்லி மக்கள் போராடி மூடாமல், தேர்தலில் இந்த அதிருப்தி எதிரொலிக்கும் என்ற நிலையில் கடை மூடப்பட்டது.
அருப்புக்கோட்டை தெற்கு தெரு பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் டாஸ்மாக் கடை உள்ளது.
கடைக்கு எதிரில் பள்ளி அருகில் மருத்துவமனைகள், கோயில்கள், எக்ஸ்-ரே லேப்புகள் என இருப்பதால், இந்தப் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும். டாஸ்மாக் கடை இருப்பதால் குடிமகன்கள் குடித்துவிட்டு போதையில் தகராறு செய்வது வழக்கம். இதனால், இந்தப் பகுதி வழியாக மக்கள் வர தயங்கினர்.
கடையை அப்புறப்படுத்த கோரி தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
2023 ல், நகராட்சியில் கடையை அகற்ற கோரிய தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
ஆனாலும் அரசு நிர்வாகம் டாஸ்மாக் கடையை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் லோக்சபா தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இப்பகுதி மக்கள் தேர்தலின் போது தனது தங்களது அதிருப்தியை தெரிவிக்க முடிவு செய்தனர்.
இதனால், ஆளும் கட்சியான தி.மு.க., விற்கு இது பாதிப்பு ஏற்படுத்தும், ஓட்டு கேட்டு சென்றால் தங்கள் கட்சிக்கு வேட்டு வைத்து விடுவார்கள் என்ற நிலையில் நேற்று முன்தினம் மாலை மக்களை குஷி படுத்தும் விதமாக கடை மூடப்பட்டது.

