ADDED : செப் 13, 2024 04:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சு பணியாளர் சங்கம் சார்பில் பணி அழுத்தத்தால் எமிஸ் பதிவேற்றத்தை புறக்கணிப்பது, ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்குவது பி.எட்., படித்தவர்களுக்கு 2 சதவீத பதவி உயர்வு, 2023ம் ஆண்டில் பணியில் சேர்ந்தவர்களை பவானிசாகர் அடிப்படை பயிற்சிக்கு அனுப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.இ.ஓ., அமுதாவிடம் மனு அளித்தனர்.
மாவட்ட தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். செயலாளர் தீபகாமாட்சி, பொருளாளர் கமலஸ்ரீதேவி பங்கேற்றனர்.