ADDED : செப் 10, 2024 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்துார் டி.மானகசேரி மக்கள், கலெக்டர் ஜெயசீலனிடம் அளித்த மனு:
எங்கள் ஊரில் உள்ள டாஸ்மாக் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பல பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி ஆலைகள், துவக்க பள்ளி, உயர்நிலைப்பள்ளி, கோயில்கள் உள்ளன. மது போதைக்கு அடிமையாகி உயிரிழப்பு ஏற்படுகிறது. பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே எங்கள் பகுதி மக்கள் நலனை கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும், என்றனர்.

