ADDED : ஜூன் 07, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
கூடுதல் மாவட்ட நீதிபதி வசந்தகுமார் தலைமை வகித்தார். சார்பு நீதிபதி சதீஷ், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆனந்தவல்லி, குற்றவியல் நீதிபதி ஜெயப்பிரதா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவரஞ்சனி உள்ளிட்டோர் மரக்கன்றுகள் நட்டனர். அருப்புக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், கோர்ட் அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.--
