ADDED : மார் 31, 2024 06:05 AM
அ நிறம் | அளவு
சிவகாசி, : சிவகாசி வட்டாரத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பாக போஷான் பக்வாடா 2024 சிவகாசி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது. கல்லுாரி முதல்வர் பாலாஜி அவர்கள் தலைமை வகித்தார்.
மகளிர் மன்ற ஒருங்கிணைப்பாளர் கனகவல்லி முன்னிலை வகித்தார். டாக்டர் வைரகுமார் விலங்கியல் துறை கவுரவ விரிவுரையாளர் கிஜிலட் மேரி பேசினர். ஊட்டச்சத்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீரலட்சுமி, மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், அனைத்து துறை மாணவிகள், மகளிர் மன்ற ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
