பட்டாசு பறிமுதல்: 3 பேர் கைது
சாத்துார்: சிவகாசி மீனம்பட்டியை சேர்ந்தவர்கள் பொன்ராஜ் 37, ஜேசுராஜ் 46, இருவரும் மேட்டமலை விமல் பயர் ஒர்க்ஸ் அருகில் பொன் மதி ஸ்ரீ பட்டாசு கடையில் வைத்து அரசு அனுமதி இன்றி பட்டாசுகள் தயாரித்தனர். போலீசார் அவர்களிடம் இருந்து பட்டாசுகளையும், மூலப்பொருட்களையும் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.
* வெம்பக்கோட்டை வெற்றிலையூரணி ஜெய் பாரதி பயர் ஒர்க்ஸ் பின்புறம் காட்டுக்குள் சிவகாசி அம்மன் கோவில் பட்டியை சேர்ந்த காளியப்பன் 26. பட்டாசுகள் தயார் செய்து கொண்டிருந்தார். பறிமுதல் செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.
பட்டாசு தயாரித்த பெண்கள் கைது
விருதுநகர்: சின்னராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் அன்னலட்சுமி 37, நாரணாபுரத்தைச் சேர்ந்தவர் அனிதா 33. இவர்கள் அனுமதியின்றி வெடிபொருட்களை வைத்து பூச்சட்டி 1 யூனிட், தரைச்சக்கரம் 1 யூனிட் தயார் செய்தனர். இருவரையும் வச்சக்காரப்பட்டி போலீசார் கைது செய்தனர்.