கஞ்சா: இருவர் கைது
சிவகாசி: திருத்தங்கல் அண்ணா காலனியைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டி 29, திருத்தங்கல் பாண்டி கோயில் அருகே கஞ்சா விற்பனை செய்தார். போலீசார் இவரை பிடித்து விசாரிக்கையில், சுந்தரபாண்டி, சிவகாசி சிவன் கோயில் நந்தவன தெருவை சேர்ந்த ராஜலட்சுமியிடம் 26, கஞ்சா வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
-----தொழிலாளி மர்மச்சாவு
சிவகாசி: நாரணாபுரம் விநாயகர் காலனி சேர்ந்தவர் கட்டட தொழிலாளி சின்ன முனியசாமி 43. மது அருந்தும் பழக்கம் உள்ள இவருக்கு வயிற்றுவலி இருந்துள்ளது. இவரின் மனைவிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை செய்ய வேண்டி இருந்ததால் மன வேதனையில் இருந்தார். இரு நாட்களுக்கு முன்பு அலைபேசியை வீட்டில் வைத்துவிட்டு வெளியே சென்றவர் வீடு வரவில்லை. இந்நிலையில் சின்ன முனியசாமி அதே பகுதியில் உள்ள தரிசு நிலத்தில் இறந்து கிடந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
-----தற்கொலை
சிவகாசி: கட்டளைபட்டி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ் காந்தி 34. அவரின் தந்தை நடத்தும் அச்சகத்தில் உதவியாக வேலை பார்த்து வந்தார். மேலும் அலைபேசியில் ரம்மி விளையாட பழக்கமும் இருந்துள்ளது. இந்நிலையில் அவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.