ADDED : மார் 14, 2025 06:32 AM
விருதுநகர்: முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுசீலா செய்திக்குறிப்பு: விருதுநகர் கோட்ட அளவிலான தபால் சேவை குறைதீர் முகாம் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து மார்ச் 24 காலை 11:00 மணிக்கு நடக்கிறது.
தபால் சம்பந்தப்பட்ட புகாரில் தபால் அனுப்பப்பட்ட தேதி, நேரம் அனுப்பியவர், பெறுவரின் முகவரி, ரசீது எண், மணியார்டர், துரித தபால், பதிவு தபால் ஆகியவற்றுக்கான விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும். சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அங்சல் காப்பீடு சம்மந்தமாக புகார் இருப்பின் கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர், முகவரி, பாலிசிதாரரின் பெயர், முழு முகவரி பணம் கட்டிய விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்மந்தப்பட்ட கடித தொடர்புகள் ஏதேனும் இருப்பின் புகாருடன் இணைக்க வேண்டும், என்றார்.